Tuesday, January 6, 2026 12:16 pm
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (06) மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4461 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, தங்கத்தின் விலை 3000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி இது 327500 ரூபாவாகக் காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 337600 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஜனவரி 1ம் திகதி 354000 ரூபாவாக காணப்பட்ட “24 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 365000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

