Thursday, January 8, 2026 3:09 pm
யாழ்ப்பாணத்தின் முக்கிய தொல்லியல் சுற்றுலா மையங்களில் கந்தரோடை விகாரையும் ஒன்றாகக் காணப்படுகின்றது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ‘கந்தரோடை விகாரை’ என சூட்டப்பட்டிருந்த பெயரினை ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது எனக் கருதி பெயர்ப்பலகை இன்று (08) வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில் ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இப் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

