தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய தலைவராக ஒரு வருட காலத்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எட்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குநர் கேத்தரின் போஹ்மே, இரண்டு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் எட்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாடு இன்று முதல் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.
