Thursday, December 4, 2025 4:49 pm
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (3) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபத்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமும் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும் எனவும் நேற்று ஏற்றப்பட்ட இந்த மகாதீபம் அடுத்த 11 நாட்களும் பக்தர்களுக்கு காட்சி தரும் எனவும் கூறப்படுகிறது.
பதினொரு நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து அவ்வாலயத்தின் ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஆரம்பமான இத்தீபத் திருநாளின் தொடர்ச்சியான நிகழ்வாக, இன்று (4) இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும் நாளை (5) இரவு பராசக்தி தெப்பல் உற்சவமும் நாளை மறுதினம் (6) இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

