Thursday, November 13, 2025 4:52 pm
வடக்கு கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்கள், இராணுவ வசத்திடமிருந்து பொதுமக்களின் சுகந்திரமான நினைவிடமாக மாற்றப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
துயிலும் இல்லங்கள் முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று ரோகன விஜயவீரவின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதே போன்று வடக்கு,கிழக்கில் கார்த்திகை மாதத்தில் பொதுமக்களால் மாவீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கம் துயிலுமில்லங்களில் மக்கள் சுகந்திரமான முறையில் நினைவு அஞ்சலிகளை செலுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் 32 க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளன. தமிழர்களாகிய எமக்கு இன விடுதலைக்காக போராடியவர்களின் நினைவான துயிலும் இல்லங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

