Tuesday, February 3, 2026 3:26 pm
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
முன்னதாக ஒருநாள் சர்வதேச தொடரையும் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில், அடுத்து T20 சர்வதேச தொடரின் முதல் இரு போட்டிகளையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 12 டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி கடைசி 10 போட்டிகளில் வெற்றிபெற்றது. இலங்கை அணி 2 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இறுதியாக இலங்கை அணி 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் டி20 போட்டியில் வெற்றியீட்டியதன் பின் தற்போது 11 ஆண்டுகளாக அவ்வணியுடன் டி20 போட்டியொன்றில் வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

