Friday, October 24, 2025 10:52 am
ரெட்ரோ, ஜனநாயகன் படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த ‘கூலி’ படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் பூஜாஹெக்டே.
அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து தற்போது ராகவா லோரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா-4’, தெலுங்கில் துல்கர் சல்மானின் 41வது படங்களில் நடிக்கின்றார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அல்லு அர்ஜுனை வைத்து அட்லி தற்போது இயக்கி வரும் சயின்ஸ் பிக்சன் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடுகின்றார் பூஜாஹெக்டே.
இந்தப் படத்தில், தான் நடனமாடும் ஐந்து நிமிட பாடலுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளாராம்.
இந்திய திரையுலகில் ஒரு பாடலுக்காக நடிகை ஒருவர் வாங்கும் அதிகூடிய சம்பளம் இதுவாகும் என கூறப்படுகின்றது.

