Thursday, February 12, 2026 11:58 am
பங்களாதேஷில் 13 ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தோ்தல் இடம்பெறுகிறது.
வன்முறை ஏதுமின்றி அமைதியாகத் தோ்தலை நடத்தி முடிக்க சுமாா் 10 லட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

