Monday, November 10, 2025 3:31 pm
அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள, ஜயகங்க சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர் ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ்ஸில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறித்த பஸ் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

