Friday, October 24, 2025 4:33 pm
இலங்கைக்கு பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் தமது நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து இலங்கையுடன் ஒக்டோபர் 28 ஆம் திகதி தாய்லாந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளது.
ப்ளாய் பிரட்டு பா மற்றும் ப்ளாய் ஸ்ரீனாரோங் ஆகிய இரு யானைகளின் வாழ்கை நிலை மோசமடைந்துள்ளதாகவும் தவறாக வழி நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்து அராசாங்கம் தெரிவித்துள்ளது.
ப்ளாய் ஸ்ரீனாரோங் 2001 ஆம் ஆண்டு ப்ளாய் சாக் சுரினுடன் சேர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ப்ளாய் சாக் சுரின் ஏற்கனவே மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் ப்ளாய் ஸ்ரீனாரோங் கதிர்காமத்தில் உள்ள கிரிவெஹெர விகாரைக்கு அருகிலுள்ள யானைகள் காப்பகத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

