Tuesday, January 6, 2026 3:07 pm
நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
இன்றைய வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று திங்கட்கிழமை அம்பாறையின் லாஹுகலவில் 173.5 மில்லி மீற்றர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கண்காணிப்பு நிலையங்களில் பதிவான மழைப்பொழிவின் அடிப்படையில் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

