2026ம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத்துக்கான அணிகளின் பட்டியல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 அணிகள் இந்தப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. ஐ.சி.சி (ICC) வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவு செய்யப்பட்ட இந்த அணிகள் 2024 T20 உலகக் கிண்ண தொடரில் நடத்தப்பட்ட சாதனைகள், ஐ.சி.சி (ICC) தரவரிசை மற்றும் பிராந்தியத் தகுதிச் சுற்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் 2024 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் செயல் திறன் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளன.
ஐ.சி.சி(ICC) T20 தரவரிசை மூலம் அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மேலும் கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு இராச்சியம், நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
