Sunday, November 2, 2025 1:34 pm
கார்த்திகை மாதத்தில் மரங்களை நடுவது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை குளிரச்செய்யும் தேசியச்செயற்பாடு என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் கார்த்திகை மாதம் மரநடுகைக்கு மிகப்பொருத்தமான காலமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது.
இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது.
மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

