Sunday, November 2, 2025 10:54 am
வடக்கு – கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கில் இருந்து வெளியேற்ற முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும், தமிழ் – முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்துக்கொள்ள இதய சுத்தியுடன் முன்வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக இக்கலந்தரையாடலில் கலந்துகொண்ட செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தில் மட்டும்தான் பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம்.
இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில்கூட அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருப்பார், தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டிருப்பார், புலித்தேவன் கையொப்பமிட்டிருப்பார், அல்லது திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளர் கையொப்பமிட்டிருப்பார்.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த ஒருடத்திலும் கையொப்பமிடவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கிமுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார் என சிவில் செயற்பாட்டாளர் செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.

