Wednesday, March 4, 2026 10:50 am
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
இன்றிரவு 7 மணிக்கு தென்னாபிரிக்க மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும் இன்று மோதவுள்ள தென்னாபிரிக்க அணியும் நியூசிலாந்து அணியுமே மோதியிருந்தன.
தென்னாபிரிக்கா அணியில் குவின்டன் டி கொக், டெவால்ட் புரூவிஸ், ரியான் ரிக்கல்டன், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் உள்ளிட்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கொன்சி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

