Tuesday, March 24, 2026 1:05 pm
ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம். எஸ். பி. சூரியப்பெரும விடுத்துள்ள விசேட அறிவித்தலில், கணினி அமைப்பில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை, ஏனைய அனைத்துப் பொதுச் சேவைகள் இன்று முற்பகல் 11.00 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை திணைக்களத்தின் அனைத்துப் பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

