Monday, January 26, 2026 1:25 pm
ஹட்டனில் நகைக்கடை ஒன்றில் இருந்து சுமார் 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியுடன் ஓடிய சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதவான் எஸ்.ராம்மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை இந்த மாதம் 27 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் தனியார் நிதி நிறுவனமொன்றில் குறித்த நகையை 1,69,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப்பணத்தில் ஒரு தொகையை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையை கடன்காரர்களுக்கும் வழங்கியுள்ளதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடமிருந்து 10,000 ரூபாய் மாத்திரமே மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

