Friday, December 5, 2025 6:10 pm
ஆறுமுகநாவலரின் 146வது நினைவு தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரில் பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலியினை தொடர்ந்து, அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தகர்கள்,சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சிலையானது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இலுப்பையடி தரிப்பிடத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

