Friday, November 21, 2025 11:26 am
முத்தரப்பு T20 தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 67 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ராவல்பிண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.
163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
முத்தரப்பு தொடரில் பங்கேற்ற முதலாவது போட்டியிலேயே இலங்கை அணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

