Friday, January 30, 2026 2:39 pm
2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
கையூட்டல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்திலிருந்தாலும், கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை பின்தங்கியே உள்ளது. இது ஏனைய துறைகளின் தரவரிசையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்கள் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கக் கடமைப்பட்டுள்ளதால் அரச அதிகாரிகள் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் 121ஆவது இடத்தில் உள்ள நிலையில், இந்தியா 93 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 135 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 149 இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

