Sunday, October 26, 2025 10:42 am
பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் இலங்கைத்திவில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இலங்கை சுகாதாரத்துறையை மையமாக் கொண்ட, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ (Chamal Sanjeewa) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு வெளியேயுள்ள மாகாணங்களில் குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்ட மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம், தென் மாகாணம் வடமத்திய மாகாணங்களில், தனிநபர் பாலியல் தொடர்புகள் அதிகமாகவுள்ளதாகவும் இலங்கை சுகாதாரத்துறை ஆபாய அறிவிப்பை விடுத்துள்ளது.
இச் செயலைக் கட்டுப்படுத்த உடனடியாக தலையீடு செய்யாதுவிட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (Sexually Transmitted Infections -STIs) கடுமையாக உயரக்கூடும் என்று வைத்திய நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கைச் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் படி, நாடு முழுவதும் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள் (Female Sex Workers – FSW), ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் Men (who have Sex with Men -MSM), போதை ஊசி போடுபவர்கள் (PWID), கடற்கரை சிறுவர்கள் (BB) மற்றும் திருநங்கைகள் (TGW) ஆகியோர் அடங்குவர். இந்த புள்ளிவிவரங்கள் பரந்த சமூகத்தில் பதிவு செய்யப்படாத நபர்களுக்கு கணக்கில் வராது என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
35 ஆயிரம் பெண் பாலியல் தொழிலாளர்கள், 80,000 MSM, 3,011 மருந்து உட்செலுத்துபவர்கள், 6,000 கடற்கரை சிறுவர்கள் மற்றும் 3,500 திருநங்கைகள் பாலியல் மற்றும் பிற IV/DEDS க்கு ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், காலி, கண்டி, குருநாகல், அநுராதபுரம், மாத்தறை மற்றும் பதுளை ஆகிய இடங்களிலும் அதிக தொற்று விகிதங்கள் பதிவாகியுள்ள நிலையில், பெரும்பாலும் மேல் மாகாணத்தில் சுமார் 6,000 பேர் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
திருநங்கைகள்: 13.3% சிபிலிஸ் சாத்தியமான, 1.4% எச்ஐவி பாதிப்பு, பெண் பாலியல் தொழிலாளர்கள்: 3.2% சிபிலிஸ், 1.8% எச்ஐவி, எம்எஸ்எம்: 2.9% சிபிலிஸ், 1.5% எச்ஐவி, குழந்தைகளில் எச்ஐவி இல்லை. ஆனால் ஆபத்தான பாலியல் நடத்தை அதிகரித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில், 39,547 நபர்கள் எச்.ஐ.வி உடன் வாழ்ந்து வருகின்றனர், 25,969 பேர் தங்கள் நிலையை அறிந்துள்ளனர். 1.2 மில்லியனுக்கும் அதிகமான எச்ஐவி சோதனைகள் நடத்தப்பட்டன, மேலும் 593,000 ஆணுறைகள் அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாடசாலைகளில் வலுவான பாலியல் கல்வியின் அவசியத்தையும், பாதுகாப்பற்ற பாலியல் பழக்கங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளர்.
பாலியல் சார்ந்த சுற்றுலா ஊக்குவிப்புகளையோ அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைகளையோ பொது சுகாதாரத்திற்கு ஆபத்தில் ஆழ்த்துவதை நாங்கள் அனுமதிக்கக் கூடாது. இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்கும், தடுப்பு திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

