Friday, December 5, 2025 12:29 pm
நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அனர்த்தம் தொடர்பான நடவடிக்கைகளின் பின்னூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியில் நடமாடும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் இரண்டை இலங்கை கடற்படை செயற்படுத்தி வருவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது இடங்களை சுத்திகரித்து, அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளில் கடற்படையின் தொழில்நுட்ப பிரிவு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும், நிவாரண செயற்பாடுகளும் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

