Monday, December 29, 2025 1:29 pm
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கு 2115 பில்லியன் ரூபாய் எனவும், நவம்பர் மாதமாகும் போது அந்த இலக்கை விட அதிகமாக வருமானத்தைத் திரட்ட முடிந்ததாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் இந்த வருமான இலக்கு 2115 பில்லியன் ரூபாயிலிருந்து 2231 பில்லியன் ரூபாய் வரை திருத்தப்பட்ட போதும், அந்தத் திருத்தப்பட்ட இலக்கும் தற்போது கடந்து சென்றுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டின் வருமான இலக்காக 1531 பில்லியன் ரூபாய் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

