Wednesday, December 3, 2025 11:23 am
கடந்த வாரம் நாட்டையே உலுக்கிய டித்வா புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வரும் நாட்களில் வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும் ,டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தொற்றாத நோய் நிலைகளில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் சிகிச்சை தற்போது சீர்குலைந்துள்ளதாக கூறியுள்ளார்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக அவர்களின் மருந்துகள் காணாமல் போயிருக்கலாம். எனவே, இந்த நோயாளிகள் தொடர்பாக தாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

