Wednesday, November 19, 2025 3:20 pm
2026ம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் 2026ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு இலட்சக்கணக்கானோர் அனுமதி நுழைவுச் சீட்டுக்களை தற்போது முன்பதிவு செய்துள்ளனர்.
“ஃபிபா” (FIFA) சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோ (Gianni Infantino) உடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஃபிஃபா பாஸ்” (FIFA Pass) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
“ஃபிஃபா பாஸ்” மூலம் நேரடியாக அனுமதி நுழைவுச் சீட்டுக்களை வாங்கிய ரசிகர்களுக்கு விசா நேர்காணலில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

