தீபாவளியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை கொழும்பின் புறக்கோட்டையிலிருந்து ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓய, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு மேலதிகமாக 75 பேருந்துகள் சேவையில் உள்ளன.
நாளை இவற்றுக்கு மேலதிகமாக 73 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.இன்றும் நாளையும் புகையிரத சேவைகள் வழமை போல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
