Wednesday, December 24, 2025 9:52 am
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்தார்.
பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மேலதிகமாக 80 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.

