Tuesday, December 30, 2025 10:29 am
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை புதன்கிழமை (31) கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் விசேட போக்குவரத்து பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் பிரிவுகளில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறும் என்பதுடன் , கடும் நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற முடியும். காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி NSA சுற்றுவட்டம் நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்துத் திட்டத்தின் போது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இத் திட்டத்திற்காக சுமார் 1200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் , நாளை கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் , அங்கு சுமார் 5900 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

