Friday, December 19, 2025 4:40 pm
இலங்கை உயர் நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களுக்கான விசேட செயற்திட்டம் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நேபாளில் உள்ள தேசிய நீதித்துறை கழகம் (NJA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் டிசம்பர் 8 முதல் 12 வரை நடைபெற்றது.
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமை தாங்கிய இவ் விசேட செயற்திட்டத்தில் அறிவுப் பரிமாற்ற மற்றும் கலந்துரையாடல் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன.
இச் செயற்திட்டம் தொடர்பான குறித்த மீளாய்வு மற்றும் அனுபவப் பகிர்வு சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (18) இலங்கை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்காக ஆண்டுதோறும் 700 மேலதிக பயிற்சி இடங்களை வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகவே நீதியரசர்களுக்காக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

