Thursday, October 30, 2025 11:30 am
மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 125 ஓட்டங்களால் அபார வெற்றிக் கொண்ட தென்னாபிரிக்க அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் 320 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
முதன் முறையாக உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, தென்னாபிரிக்க மகளிர் அணி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

