Tuesday, December 30, 2025 3:53 pm
இலங்கையில் நருவான் தயானந்த மற்றும் சுரேஷ் பி. பெஞ்சமின் ஆகிய ஆராய்ச்சியாளர்கள், யுடிவாரக்னா (Utivarachna) என்ற பேரினத்தைச் சேர்ந்த ஆறு புதிய சிலந்தி இனங்களை அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
உடற்கூறியல் ஆய்வுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இந்த உயிரினங்கள், ஆசிய பிராந்தியத்தின் உயிரியல் பன்முகத்தன்மையை உலகிற்குப் பறைசாற்றும் முகமாக அமைந்துள்ளது.
அந்த வகையில், (பூ) boo sp. nov ,(ஹப்புடேல்) haputale sp. nov ,(லூலேகொண்டெரா) loolecondera sp. nov ,(மந்தாரம்) mandaram sp. nov ,(பீகாபூ) peekaboo sp. nov ,(அப்கோடென்சிஸ்) upcotensis sp. nov போன்றவையே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வகைகளாகக் காணப்படுகின்றது.
மேலும், இக் கண்டுபிடிப்புக்கு முன்னராக இலங்கையில் இந்த குறிப்பிட்ட பிரிவில் ஒரே ஒரு இனம் மட்டுமே இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் தெற்காசியாவின் பூச்சியினத் தரவுகளை மேம்படுத்துவதோடு,எதிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் துணைபுரியும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

