Monday, November 3, 2025 12:36 pm
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்ச நிலமையே உள்ளது. இதனை ஜனாதிபதியே தெரிவித்திருக்கின்றார். அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சி அறிவாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கிகளை கேட்கின்ற போது அது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை மேற்கொள்ளவேண்டும்.
ஆனால் துப்பாக்கிகளை வைத்திருப்பது என்பது ஆபத்தானது. கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கியால் சண்டையிட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.
நான் முதல்தடவை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போது துப்பாக்கி தந்தார்கள். அதனை குறிப்பிட்ட காலத்திலே அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைத்து விட்டேன்.
மீண்டும் துப்பாக்கி தருகின்றது என்றால் பயிற்சி இல்லாமலே எனக்கு தரமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

