Saturday, November 8, 2025 8:46 am
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. இது வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த பாதீட்டில் நாட்டின் முக்கிய பிரச்சினையான இனப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை . தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என எந்த ஒரு விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை .
ஆசிய வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
அவ்வாறு பெரும் கடன்களை எந்த வகையில் இவர்கள் அடைக்கப் போகின்றார்கள்? அதுவும் மக்களின் தலைகளில்தான் சுமத்தப்படும். வழமையாக ஓர் அரசாங்கம் வருடாந்தம் கொண்டுவரும் ஒரு பாதீட்டு சடங்காகவே இந்த பாதீடும் அமைந்துள்ளது.
அதாவது இது ஒரு வெற்று பாதீட்டு திட்டமென்று என தெரிகிறது. என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

