Wednesday, December 31, 2025 10:39 am
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதன்படி, வைத்தியசாலையின் 14ம் இலக்க விடுதியின் சிறைக்கைதி ஒருவர் மீதே காலை 9 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த கைதி அறுவைச் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் , அவரது வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

