Saturday, December 27, 2025 10:40 am
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நாளை சந்திக்கவுள்ளார்.
அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஷெலன்ஸ்கி , போர் நிறுத்தத்துக்காக டிரம்பினால் உருவாக்கப்பட்ட ’20 அம்ச அமைதித் திட்டம்’ மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான முன்மொழிவுகளை 90 சதவீதம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புத்தாண்டிற்கு முன்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என உக்ரைனின் ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
மேலும் , இந்த சந்திப்பின் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

