Monday, February 9, 2026 4:17 pm
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெற்ற ஏழாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணியானது 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பில் மைக்கேல் லீஸ்க் அதிகபடியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

