Monday, December 22, 2025 11:49 am
கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.தொடர்புடைய அறிக்கை கிடைத்ததன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி, பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட குழுவினர் மூலம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பேசிய காணொளி தற்போது பாரிய சரச்சையை எழுப்பியுள்ளது.
குறித்த மாணவி பாடசாலையில் விளையாட்டில் பல திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
பரீட்சையொன்றுக்கு தோற்றவிருந்த காரணத்தினால் பாடசாலையின் வருடாந்த நிகழ்வின் ஒத்திகைக்கு குறித்த மாணவி பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இது தொடர்பில் அந்த மாணவி பொறுப்பான ஆசிரியர்களிடமும் அறியப்படுத்தியுள்ளார்.
ஆனாலும் மாணவி ஒத்திகை நிகழ்வுகளில் பங்கேற்காத காரணத்தினால், வருடாந்த நிகழ்வில் மாணவிக்கு வழங்கப்படவிருந்த விருதை அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகம் மற்றுமொரு மாணவிக்கு வழங்கியுள்ளது.
இவ்விடயத்தை வருடாந்த விழாவி்ல் வைத்து பாதிக்கப்பட்ட மாணவி வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவு பகிரப்பட்டு வந்தது.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகவும், இந்த மாதிரியான விடங்கள் இனியும் நடக்ககூடாது எனவும் குறித்த மாணவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

