Monday, November 10, 2025 11:24 am
இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சவூதி அரேபியா நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதிடம் சவூதி அஞ்சல் வெளியிட்ட இந்த நினைவு தபால்தலைகளை கையளித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில், ஒரு வரலாற்றுத் தருணம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் நடைபெறும் 26வது ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

