ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான 64 வயதான டகாய்சி ராஜினாமா செய்த ஷிகேரு இஷிபாவுக்குப் பின் பொறுப்பேற்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் லிபரல் டெமாக்ரடிக் கட்சி சந்தித்த மூன்று மாத அரசியல் வெற்றிடம் முடிவுக்கு வருகிறது.
கடுமையான போட்டிக்கு மத்தியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றுள்ளார்.