Tuesday, December 30, 2025 4:51 pm
இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் இசைக்குயில் என்று போற்றப்படும் லதா வல்பொல கடந்த 27ம் திகதி தனது 91வது வயதில் காலமானார்.
லதா வல்பொல இசைத்துறை தொடர்பாக தனக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, அனைவரது திறமைகளையும் மேம்படுத்தி மெருகேற்றி ஒரு தாயைப் போல நடந்து கொண்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயர்ந்த மனிதநேயப் பண்புகளைப் பெற்ற நமது நாட்டின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவராகவும், ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் கம் உதாவ வேலைத்திட்டத்தை வெற்றிகரமானதொரு திட்டமாக மாற்றுவதற்கு தனது அளப்பரிய பங்களிப்பை நல்கியவராகவும் இவர் காணப்பட்டார்.
இந்நாட்டின் இசைத்துறை வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைபெற்று விளங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மறைந்த இந்நாட்டின் புகழ்பூத்த பாடகி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (30) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் ,லதா வல்பொலவின் திடீர் மறைவுக்கு சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்தார்.

