Monday, November 3, 2025 12:24 pm
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக சற்றுமுன்னர் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது, அவர் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் இந்தியாவில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசா செல்லும் முதலாவது இந்திய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

