Thursday, January 22, 2026 10:47 am
கண்டி, கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறை தொடர்பில் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தப் பாறையின் உட்பகுதியில் சிறிய அளவிலான லாப்ரடோரைட் (Labradorite) கனிமம் காணப்படுகிறது. இது அதன் தனித்துவமான கனிமப் பண்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கனிமம் அதன் சிறப்பான ஒளி எதிரொளிப்புத் தன்மை கொண்டது. இது ‘லாப்ரடோரெசென்ஸ்’ (Labra-dorescence) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பாறையின் மேற்பரப்பில் நீல நிற மின்னல்கள் போன்ற ஒளிக்கற்றைகள் தோன்றும்.
லாப்ரடோரைட் ஒரு அரை-விலைமதிப்பற்ற கல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறை சந்தையில் மிக உயர்ந்த வணிக மதிப்புக் கிடையாது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

