Tuesday, December 9, 2025 12:40 pm
சமீபத்திய அனர்த்த நிலைமைகள் காரணமாக இலங்கையில் 764 மதத் தலங்கள் சேதமடைந்துள்ளன.
இது சீரற்ற காலநிலை, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்பாகும்.
இதனால் 379 விகாரைகள், 165 கோவில்கள், 63 தேவாலயங்கள் மற்றும் 157 மசூதிகள் சேதமடைந்துள்ளதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அனைத்து மதத் தலங்களையும் மீட்டெடுத்து புனரமைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களில் செய்யப்படும் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
அதன்படி , சுத்திகரிப்பு செய்வதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

