Friday, November 14, 2025 10:17 am
புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெற்ற காரணத்தினால் புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட அறிக்கையில், 34 வருட அரச சேவைக்குப் பிறகு தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

