Sunday, November 23, 2025 11:49 am
இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயம் முற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிக்க சென்றுள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டதை தொடர்ந்து, சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்த விஜயத்தின் போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும், எவ்வித பதிலும் கூறாது அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

