Tuesday, March 17, 2026 3:40 pm
தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா தன்னைப்பற்றி கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து என ரஜினி காந்த் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னையில் நடந்த த.வெ.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘திமுக மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கை விட்டார்” என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.

