Tuesday, December 2, 2025 10:06 am
நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு ,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மத்திய, மேற்கு, சப்ரகமுவ, ஊவா, அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதால் இதனால் வரவிருக்கும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

