Friday, February 20, 2026 2:29 pm
மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்படும் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து அதற்கு தேவையான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் செயல்படும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தற்போதுள்ள சட்ட மற்றும் நடைமுறைத் தடைகளை நீக்கி மிகவும் பொருத்தமான தேர்தல் முறையை அடையாளம் காண்பதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த சிறப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சுனில் வட்டகல, இராசமாணிக்கம் சாணக்கியன், லக்ஸ்மன் நிபுனாராச்சி, சமன்மலீ குணசிங்க, முனீர் முலாஃபர், அருண் ஹேமச்சந்திர, தர்மப்பிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி, நிசாம் காரியப்பர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

