Thursday, February 12, 2026 3:37 pm
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இழப்பிற்கு நீதி கோரிய போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. உயிரிழந்தவரின் உடலுடன் உறவினர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பதாகைகளை தாங்கியவாறு வந்த உறவினர்கள் “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவரின் உடலத்தை வீதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


