Tuesday, March 24, 2026 3:13 pm
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வஞ்சிப்பதேன்?, வெளிமாவட்ட ஆசிரியர்கள் இடமாற்ற உரிமை இழந்தவர்களா?, உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் பதாதைகளை தாங்கி போராடத்தை முன்னெடுத்திருந்தனர்.
வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களது இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயநலங்களுக்காக தடுக்கப்பட்டு வருகின்றது. எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதுகளின் சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளை மதித்து நீதியை தரவேண்டும் என்றும் போராட்டகாரர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

